Astrology
மேஷம் ஜூலை மாதம் ராசி பலன்கள் 2018!
அன்புள்ள மேஷம் ராசிக்காரர்களே, இந்த ஜூலை மாதம் தொழில் வளர்ச்சி மேலோங்கும் மாதமாக இருக்கப் போகின்றது. ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்றுள்ளதால் நினைத்த காரியம் கைக்கூடும். சுக்கிரன் உங்கள் ராசிநாதனை பார்ப்பாதல் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் கிடைக்கும். உங்கள் தொழிலுக்கு போதிய நிதி கிடைக்காமல் இருந்தவர்களுக்கு, இந்த மாதத்தில் பலரும் உதவி செய்ய முன்வருவர்.
கிரகங்கள் சாதகமாக இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி அடையும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். தெளிவான சிந்தனை பிறக்கும். குருவின் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தில் விழுவதால் செய்கின்ற வேலையில் இரட்டிப்பு லாபம் பெறுவீர்கள். ஜூலை 9-ம் தேதி செவ்வாய் மகரத்தில் வக்ரம் அடைவதால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்க முடியாது.
அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் போட்டி, பொறாமை நிலவும். எதிலும் நிதானமாக, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சோர்வு நீங்கி சுறுப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். ஜூலை 4-ம் தேதி குரு துலாம் ராசியில் வக்ர நிவர்த்தி ஆகின்றார். குரு பகவான் வக்ர நிவர்த்தியாகி உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்து ராசியை பார்ப்பாதல் பொலிவுடன் காணப்படுவீர்கள். புதிய வேலை கிடைக்கும்.
ஜூலை 5-ம் தேதி சிம்மத்தில் சுக்கிரன் சஞ்சாரம் செய்கின்றார். பிள்ளைகள் சம்மந்தமான விஷயங்கள் நல்ல படியாக முடிவு பெறும். படித்து முடித்த பிள்ளைகளுக்கு நல்ல வேலை அமையக்கூடும். திருமண பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும். கடக ராசியில் புதன் சூரியனோடு இணைந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் திறனை கொடுப்பார். பொருளாதார பிரச்சனை அகலும். கல்விக்காக எடுத்த முயற்சி நல்ல விதத்தில் முடிவடையும்.
