மேஷம் ஜனவரி மாத ராசி பலன் 2023!

செவ்வாய் பகவான் ரிஷபத்தில், குரு பகவான் 12 ஆம் இடத்தில் உள்ளனர், சனி பகவான் இடப் பெயர்ச்சி அடைவதால் அனுகூலப் பலன்கள் கிடைக்கப் பெறும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விஷயங்கள் அனைத்தும் ஈடேறும்.

பதவி அதிகாரம், புதிய வேலை, எதிர்பார்த்த இடமாற்றம், மேல் அதிகாரிகளின் பாராட்டு என மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தொழில் செய்வோரைப் பொறுத்தவரை தனவரவு சிறப்பாக இருக்கும். திருமண காரியங்களுக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு ஜனவரி மாதத்தில் வரன் கைகூடி வரும்.

ராகு – கேது 1 மற்றும் 7 ஆம் இடத்தில் உள்ளனர். உடல் நலனைப் பொறுத்தவரை சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். மாணவர்கள் கல்விரீதியாக மேம்பட்டு இருப்பர். மேலும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவார்கள். உயர்கல்விரீதியாக சிறப்பான முடிவினை எடுப்பீர்கள்.

சுப விரயங்கள் நிறைந்த மாதமாக ஜனவரி மாதம் இருக்கும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் சரியாகி குடும்பத்தில் சுமூக நிலை ஏற்படும்.

சனி பகவான் சாதகமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியினைக் கொண்டு வந்து சேர்க்கும். மேலும் துணிவோடு எந்தவொரு காரியத்தையும் செய்து முடிப்பீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.