மேஷம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023!

சுக்கிரன் – சனி கூட்டணி அமைத்து லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தில் உள்ளனர். பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறும். எதிர்பார்த்ததுபோல் புதிய வேலை கிடைக்கும். வேலைவாய்ப்பு- குடும்பம் என இரண்டையும் பேலன்சிங்க் செய்து செல்வதுபோல் இருக்கும்.

தொழில் செய்வோருக்கு பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைத்தல், தொழில் அபிவிருத்தி என ஆதாயம் தரும் மாதமாக பிப்ரவரி மாதம் இருக்கும்.

மாதத்தின் முற் பகுதியில் புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கும், மாதத்தின் பிற்பாதியில் கும்ப ராசிக்கும் இடப் பெயர்ச்சி ஆகிறார். பொருளாதாரம் என்று எடுத்துக் கொண்டால் செலவுகள் அதிகமாக இருக்கும்.

சுப செலவாக வண்டி வாகனம் வாங்குதல், நகைகள் வாங்குதல், வீடு, மனை வாங்க அட்வான்ஸ் கொடுத்தல் என்பது போன்ற செலவுகள் ஏற்படும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன் பார்க்கும் வேலையில் மும்முரமாகக் களம் இறங்கலாம்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை பெரிய அளவில் கணவன்- மனைவி இடையே சண்டை- சச்சரவு இல்லாவிட்டாலும் மனக் கசப்பு இருக்கும். காதலர்கள் வீட்டில் காதலைச் சொல்லும்போது பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இல்லாமல் பெற்றோர் ஏற்றுக் கொள்வார்கள்.

மாணவர்கள் கல்விரீதியாக மிகவும் கவனத்துடன் படித்து கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் பெரிய அளவில் குறைபாடுகள் ஏதும் இருக்காது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews