மேஷம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

செவ்வாய் வக்ர நிலையில் உள்ளார், புதன் 8 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் இடத்திற்கு இடப் பெயர்வு செய்கிறார். சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடப் பெயர்வு செய்கிறார்.

சனி பகவான் 10 ஆம் இடத்தில் உள்ளார், ராகு- கேது 1 மற்றும் 9 ஆம் இடங்களில் உள்ளது. குரு பகவான் 12 ஆம் இடத்தில் உள்ளார், சனி பகவானின் நிலை வேலைவாய்ப்புரீதியாக சிறப்பானதாகவே இருக்கும்.

தொழில்ரீதியாக அபிவிருத்தி எதையும் தற்போதைக்கு செய்ய வேண்டாம். செவ்வாயின் வக்ரத்தால் மனநிலை நிம்மதியில்லாமல் காணப்படும்.

குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் சரியாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு பண வருமானம் ஒருபுறம் இருந்தாலும், வீண் செலவுகள் கட்டுக் கடங்காமல் செல்லும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வரன் கைகூடும் காலமாக இருக்கும். காதலர்கள் மத்தியில் பிரிவு ஏற்பட வாய்ப்புண்டு. மாணவர்கள் கல்வி நலனில் மேம்பட்டு இருப்பார்கள்.

எதிர்காலம் குறித்து எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். ஆரோக்கியம் ரீதியாக உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பத்தினைத் தாங்கி நடத்திச் செல்வீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews