மேஷம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

இதுவரை இருந்துவந்த மன உளைச்சல் குறைந்து மன நிம்மதி ஏற்படும். மேலும் கடந்த காலங்களில் உறவுகளில் இருந்து வெறுப்பு, சண்டை – சச்சரவு குறையும்.

சனி பகவானின் வக்ரம், குரு பகவானின் வக்ரம் போன்றவை தொழில் ரீதியான முன்னேற்றத்தினை ஏற்படுத்தும்.

புதிய தொழில் துவங்குபவர்களுக்கு ஏற்ற கால கட்டமாகும். மேலும் புதிதாக வேலை தேடுவோருக்கும் சரி, இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாற நினைப்போருக்கும் சரி நினைத்தது ஈடேறும் கால கட்டமாக இருக்கும்.

மேலும் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நேர்மறையான காலகட்டமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் குடும்பத்தில் மன மகிழ்ச்சி அதிகமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கணவன்- மனைவி உறவில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் செவ்வாய் பகவானின் ஆசிர்வாதத்தால் பிரச்சினைகள் சரியாகும். உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தல் நல்லது. திருமண காரியங்களை நடத்த நினைப்போருக்கு தடங்கல் ஏற்படும்.

குழந்தைகளின் படிப்பு ரீதியாக செலவுகள் ஏற்படும். உடல் நலம் என்று கொண்டால் உடல்நலம் முந்தைய மாதங்களைவிட மேம்பட்டு காணப்படும். வீடு, வாகனங்கள் வாங்க நினைப்போருக்கு ஏற்ற காலகட்டமாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews