மேஷம் அதிசார கும்ப சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

உங்களுடைய ராசியில் இருக்கும் ஜென்ம ராகு அதிகபட்ச அலைச்சலை கொடுத்துக் கொண்டு இருப்பார். அந்த அலைச்சலை உபயோகமான அலைச்சலாக இந்த சனி பெயர்ச்சி மாற்றிவிடும் .

12ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் சுப விரயத்தை கொடுத்தாலும் அடுத்து வரக்கூடிய ஜென்ம குரு வருமான அளவை பல மடங்கு அதிகப்படுத்தி விடுவார்.

இந்த வருடம் முழுவதும் பல்வேறு விதமான மகான்கள், யோகிகள் மற்றும் சித்தர்கள் தரிசனம் உங்களுக்கு கிடைக்கும்.

பல ஜீவ சமாதிகளுக்கு சென்று அங்கே உங்களால் ஆன உடல் உழைப்பை தாருங்கள்.

அது தவிர உங்கள் ஊரில் உள்ள காளி என்ற பெயர் உள்ள கோயில்களுக்கு (அங்காள பரமேஸ்வரி என்ற அங்காளி, பத்திரகாளி, செங்காளி, இரட்டை காளி, உத்தரகாளி, ரண பத்திரகாளி, ருத்ரகாளி, மகா காளி) வெள்ளிக்கிழமை தோறும் சென்று வாருங்கள்.

உங்கள் ஊரில் அல்லது கிராமத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட காளி அம்மன் கோயில்கள் இருந்தால் அத்தனை காளி கோவில்களுக்கும் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் சென்று மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து வாருங்கள்.

இந்த வருடம் முழுவதும் வருமான அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும்.

அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற விஷயங்களுக்கு வீண் செலவு, ஆடம்பர செலவு செய்வதை தவிர்ப்பது நன்று.

உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடன் பணிபுரிபவர்கள் போன்றவர்களுடைய குடும்பப் பிரச்சனைகள் அல்லது காதல் விவகாரங்களில் இந்த வருடம் முழுவதும் தலையிடாமல் இருப்பது நன்று.

சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
+919629439499
ராஜபாளையம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.