மேஷம் ராசி ஏப்ரல் மாதம் ராசி பலன்கள் 2018!

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் திறமை, செல்வாக்கு அதிகரிக்கும் மாதமாக இருக்கப் போகிறது. மேஷம் ராசியினருக்கு திடீர் பயணங்களும், செலவுகளும் ஏற்படக்கூடும். பணவரவு சீராக இருந்தாலும் வரவுக்கு மீறி செலவுகள் ஏற்படும். முடிந்த அளவிற்கு சிக்கனமாக இருக்க வேண்டும். உங்கள் ராசியில் இருந்து குரு பகவான் ஏழாம் வீட்டில் அதாவது துலாம் ராசியில் இருப்பதால் சுப நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழும். உறவினர்களின் சுப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே அவ்வப்பொழுது சிறு சிறு வாக்குவாதம் ஏற்பட்டாலும் அதனை பெரிதுப்படுத்த வேண்டாம்.

மேஷம் ராசியினர் குடும்பத்தில் இருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும். மேலும் நன்மைகள் நடைபெற குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுங்கள். மேஷம் ராசியினர் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.

ஏப்ரல் 30-ம் தேதி செவ்வாய் கேதுவுடன் இணைந்து உங்கள் பத்தாம் வீட்டில் இருக்கப் போகிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் இருப்பதால் உங்கள் திறன் அதிகரிக்கும். இதுவரை நிலுவையில் இருந்து வந்த சொத்துப்பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள். குறிப்பாக ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்லவை நடைபெறும் மாதமாக இருக்கப் போகிறது.

சனி பகவான் உங்கள் ராசியில் இருந்து ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரம் மற்றும் தொழில் பிரிவினருக்கு எதிர்பார்த்த படி நல்ல லாபம் கிடைக்கும். உணவு, ஸ்டேஷனேரி, கெமிக்கல்,மருந்து, ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்பவர்கள் அடைவார்கள். புதிய ஏஜென்ஸி, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை அதிகரிக்கும். யாரையும் புறம் பேசாதீர்கள். உங்களிடம் ஒப்படைக்கும் பொறுப்புகளை யாரிடமும் கொடுக்காமல் நீங்களே செய்து முடித்து விடுங்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment