மேஷம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

மேஷ ராசியினைப் பொறுத்தவரை சனி பகவான் 11 ஆம் இடத்தில் உள்ளார். குரு பகவான் 1 ஆம் இடத்திற்கு இடப் பெயர்ச்சி ஆகிறார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு என நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும் வகையிலான விஷயங்கள் ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பாதி ஆரம்பத்தில் நடந்தேறும்.

தொழில்ரீதியாக முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். பணப் புழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை இருந்த தடங்கல், தாமதங்கள் அனைத்தும் சரியாகும்.

குடும்ப வாழ்க்கையில் கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும்; கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து சிறப்பான புரிந்துணர்வுடன் இருப்பீர்கள். மேலும் குடும்பத்துடன் வெளியூர்ப் பயணங்கள், சுற்றுலா என மகிழ்ச்சிகரமான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை தெளிவான சிந்தனையுடன் இருப்பார்கள். உயர்கல்வி ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் நேர்மறையான பலனைக் கொடுப்பதாய் இருக்கும்.

உடல் ஆரோக்கியம்ரீதியாக சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருக்கும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

வீடு சார்ந்த இடமாற்றம் நடக்கப் பெறும். மேலும் தங்கநகைகளில் முதலீடு செய்வீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews