மேஷம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

செவ்வாய் ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் தைரியமாக எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். இராசியில் ராகு இருப்பதால் கோபத்தினை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையப் பெறும். இதனால் முன் கோபத்தினைத் தவிர்த்து பொறுமையுடன் செயல்படுதல் நல்லது.

உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் 7 ஆம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பார். மனைவியின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் குறையும். கணவன் – மனைவி இடையேயான பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்கு மாறும்.

சகோதரர் உடல் நலனில் அக்கறை தேவை. 4 ஆம் இடத்தில் சனி பகவான் மற்றும் குரு பகவானின் பார்வை உள்ளது. தாயின் உடல் நலனில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவு இருக்கும், கவனத்துடன் இருத்தல் நல்லது.

ராசிக்கு 6 ஆம் இடத்தில் புதன் இருப்பதால் கடன் வாங்கி சுபச் செலவு செய்வீர்கள். குழந்தைகள் படிப்புரீதியாக மேம்பட்டுக் காணப்படுவார்கள்.

9 ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் தந்தைக்கு விரயச் செலவுகள் ஏற்படும்.

10 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் வக்கிர கதியில் இருந்து வக்கிர நிவர்த்தி அடைவதால் தொழில்ரீதியாக, வேலைவாய்ப்புரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். தொழில் அபிவிருத்தி செய்யும் முயற்சியில் ஈடுபடலாம்.

சிவ பெருமான் கோவிலுக்குச் சென்று வருதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews