மேஷம் ஆவணி மாத ராசி பலன் 2018!

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் வளர்ச்சியான மாதமாக இருக்கும். கடகத்தில் இருக்கும் புதன் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருப்பதால் நன்மைகள் தந்துக் கொண்டிருப்பார். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதி பெருகும்.

புதன் பகவான் ஆகஸ்ட் 28-ம் தேதி சிம்மம் ராசிக்கு செல்வதால் அலைச்சல் உண்டாகும். இல்லத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதம், சிறு சண்டை சச்சரவு உருவாகலாம் என்பதால் நிதானத்தை கடைப்பிடியுங்கள். வாழ்க்கை துணையிடம் மனக்கசப்பு வர வாய்ப்பு உள்ளதால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

புதன் பகவான் செப்டம்பர் 15-ம் தேதி கன்னி ராசிக்கு செல்வதால் நற்பலன்களை கொடுப்பார். குரு பகவானால் இல்லத்தில் சுப நிகழ்ச்சி பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக முடிவடையும். அலுவலத்தில் வேலை சுமை அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் வரக்கூடும். சுப விரயங்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும் என்பதால் சோம்பலை உதறித் தள்ளிவிட்டு முயற்சி செய்யுங்கள். சிறிய முயற்சி செய்தாலும் எதிர்பாராத வகையில் அதிக அளவில் நன்மை ஏற்படும் மாதமாக இருக்கப் போகின்றது.

பணவரவு சீராக வரக்கூடும். ஒரு சிலருக்கு வாங்கிய கடனை அடைப்பதற்கு போதிய அளவிற்கு வரவு இருக்கும். இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் நிரந்தரமாக வருமானம் அமையவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த மாதம் ஏற்றமான மாதமாக அமையும்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் தொழில், வியாபாரம் சிறக்கும். வெளிமாநிலம், வெளிநாடு சென்றவர்களுக்கு மாற்றங்கள் நிகழும். ஒரு சிலர் சொந்த ஊருக்கு திரும்ப வரவேண்டிய சூழ்நிலை வரக்கூடும். மாற்றங்கள் எதுவாயினும் உங்களுக்கு ஏற்றத்தை தரக்கூடியதாக இருக்கக்கூடும். மேஷம் ராசியினருக்கு மாத தொடக்கத்தை விட மாத பிற்பகுதியில் கூடுதல் வளர்ச்சியும், பணவரவும் இருக்கும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment