மேஷம் ஆடி மாத ராசி பலன் 2022!

செவ்வாய் ராகுவுடன் இணைந்துள்ளதால் கணவன் மனைவி- இடையேயான மனக் கசப்புகள் குறையும். நீதிமன்றம் சார்ந்த வழக்குகளை ஆறப்போட்டு கையாளுதல் நல்லது.

இராசியில் இருக்கும் செவ்வாய் வேலை மாற்றம், இட மாற்றம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். புதிதாக வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கேது பார்வையால் அதிக அளவில் உள்ளது.

சுக்கிரன் அமைப்பில் நல்ல வீரியம் உள்ளதால் தொழில் ரீதியான மிகச் சிறந்த மாற்றத்தைக் காணலாம். பண வரவுகள் ரீதியாக கொடுக்கல் வாங்கலில் நிதானமாகச் செயல்படுவீர்கள்.

குரு சனி ஸ்தானம் பெற்றதால் வேலைப் பளு குறையும், பதவி உயர்வு ஆடி மாதத்தில் நடைபெறும். வேலையைவிட்டு விட்டு புதிய வேலைக்கு முயற்சிக்காதீர்கள். ராகு பகவான் புதிதாக செய்யும் விஷயங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவார்.

திருமணம் சார்ந்த காரியங்களில் அதிக அலைச்சல் ஏற்படும். சகோதர சகோதரிகளின் உறவு மேம்படும். குடும்பத்தில் கலக்கம் இருந்தாலும் மனம்விட்டுப் பேசினால் பல பிரச்சினைகளை தீர்க்கமுடியும்.

கல்வி சார்ந்த விஷயங்களில் குழந்தைகள் மேம்பட்டு இருப்பர். வெளியூர்ப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். வெளிநாடுகளுக்கு முயற்சி செய்வோருக்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

சனி வழிபாடு, வரலட்சுமி விரதம் செய்து வருவது நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews