
பொழுதுபோக்கு
செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து உதயநிதி வெளியிட்ட மெர்சல் ட்வீட்!
தமிழத்தில் மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை, 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும், 186 நாடுகளைச் சார்ந்த 2500 செஸ் விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் செஸ் ஒலிபியாட் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.அந்த விளம்பர திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.மகாபலிபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் போட்டியில் கலந்துக் கொள்பவர்களையும், பார்வையாளர்களையும், விருந்தினர்களையும் வரவேற்க ’வணக்கம் செஸ் சென்னை’ என்ற தீம் பாடல் தமிழக அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பட்டு சட்டை, வேட்டியுடன் அணிந்து வந்திருந்தனர். அதேபோல் தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டனர்.
கமல்ஹாசன் குரலில் உருவாக்கப்பட்ட தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பெருமை, கல்லணை, கோயில்கள், கவிஞர்கள், சங்க இலக்கியம், சோழர்கள் என முப்பரிமானத்தில் செய்து காட்டப்பட்ட நிகழ்த்துக்கலை அனைவரையும் வியக்க வைத்தது. மேலும்லிடியனின் இசை நிகழ்ச்சிகளும் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது.
கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது,எங்கு தெரியுமா ?
தொடக்க விழாவை விட நிறைவு விழா இன்னும் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
