Connect with us

திருமணத்திற்கு ரெடியான மெர்சல் பட நாயகி: மாப்பிளை யார் தெரியுமா?

nithya menon

பொழுதுபோக்கு

திருமணத்திற்கு ரெடியான மெர்சல் பட நாயகி: மாப்பிளை யார் தெரியுமா?

ஓ காதல் கண்மணி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் நித்யா மேனன். அதன்பின்னர் மெர்சல் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்தது நீங்காத இடம்பிடித்தார்.

தற்போது தற்போது தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் தாய்க்கிழவி பாடலானது பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.

இருப்பினும் நித்யா மேனனுக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நித்யா மேனன் திருமண செய்தி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

அந்த வகையில் மலையாள உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹீரோவைத் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக காதல் திருமணம் என்றும் பெற்றோர்களை சமாதானப்படுத்தி இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top