வெறும் கண்துடைப்பு கைது மட்டும் போதாது; கடுமையான நடவடிக்கை வேண்டும்!: இபிஎஸ்
இரண்டு நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் திமுக பிரமுகர் ஒருவர் ஈடுபட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் தற்போது கைதாகியுள்ளார். அவரை கைது செய்ததற்கு மகிழ்ச்சி என்று நேற்றைய தினம் திமுக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியிருந்தார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இதுகுறித்து கருத்து கூறியுள்ளார்.
அதன்படி விருதுநகர் இளம் பெண் பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். விருதுநகரில் இளம்பெண் வாழ்வை சீரழித்தவர்கள் மீது திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திமுக பிரமுகர் உட்பட 8 பேர் மீது கண்துடைப்பு கைது நடவடிக்கை மட்டும் போதாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை வைத்தார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார்.
