Connect with us

வியாபாரி உயிரிழப்பு-காவலர் தாக்குதல்! மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!

News

வியாபாரி உயிரிழப்பு-காவலர் தாக்குதல்! மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!

4efb502e1c5be07673ffef24f8e3af99-1

தமிழகத்தில் காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகதை பல்வேறு பகுதிகளில் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் போல் பல காவலர்கள் மக்களுக்கு நண்பர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் உணவின்றி தவித்த சாலையோர மக்களுக்கும் காவலர்கள் உணவு அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வதற்கு எந்த ஒரு தவறும் இல்லை என்று கூறும் அளவிற்கு நல்லதொரு செயல்பாட்டில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.2fa9e4b9d7c73773a9666351aca0fc5d

ஆனால் பல பகுதியில் காவல்துறையினர் காட்டுமிராண்டித் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. மேலும் பல பகுதிகளில் பொதுமக்கள் இதனால் அச்சமடைந்து மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கையும் அவரது உடம்பு  அடிபட்டு போகிறது. இது தொடர்ந்து தமிழகத்தில் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சேலத்தில் எடப்பாடி பகுதியில் காணப்படுகின்ற சோதனைச்சாவடியில் எஸ் எஸ் ஐ காவலர் ஒருவர் வியாபாரி ஒருவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார். மேலும் அவர் லத்தியால் தாக்கி தரையில் முட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த வியாபாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக தற்போது மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி சேலத்தில் காவலர் தாக்குதலில் வியாபாரி உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு சேலம் சரக டிஐஜி மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் இது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top