Connect with us

மே 5 ஆம் தேதி திருச்சியில் வணிகர் விடியல் மாநாடு !! முதல்வர் பங்கேற்பு ..

மு க ஸ்டாலின்

தமிழகம்

மே 5 ஆம் தேதி திருச்சியில் வணிகர் விடியல் மாநாடு !! முதல்வர் பங்கேற்பு ..

மே 5 ஆம் தேதி திருச்சியில் வணிகர் விடியல் மாநாடு !! முதல்வர் பங்கேற்பு ..

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துவருகிறது. குறிப்பாக வணிகர்களின் வாழ்வாதாரத்தை காப்பற்றுதல் மற்றும் உயர்த்துவது போன்ற நலத்திட்டங்களுக்கு திமுக அரசு தூண்களாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 39-வது வணிகர் தின மாநில மாநாட்டை தமிழக வணிகர் விடியல் மாநாடாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.

திருச்சியில் வருகின்ற 5- ஆம் தேதி வணிகர் விடியல் மாநாடு நடக்க இருப்பதாகவும், இந்த மாநாட்டில் கலந்துரையாடுவதற்காக தமிழக முதல்வர் பங்கேற்பதாகவும் கூறினார்.

இதனையடுத்து இம்மாநாட்டில் அமைச்சர் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்  நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளப்போவதாக அவர் கூறினார்.

மேலும், அன்றைய தினத்தில் தமிழக வணிகர்களின் மேம்பாடு குறித்து கோரிக்கை வைப்பதாகவும், அனைத்து வியாபாரிகளும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top