Connect with us

கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு ரூ.5 ஆயிரம்; ‘தங்கத் தந்தை’ பாராட்டுச் சான்றிதழுடன் என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

Money

News

கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு ரூ.5 ஆயிரம்; ‘தங்கத் தந்தை’ பாராட்டுச் சான்றிதழுடன் என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு ரூ.5 ஆயிரம்; ‘தங்கத் தந்தை’ பாராட்டுச் சான்றிதழுடன் என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

கரூரில் கருத்தடை செய்து கொள்ள முன்வந்த ஆண்களுக்கு “தங்கத்தந்தை” என்ற பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, ஊக்கத் தொகையாக தலா ரூபாய் 5000 வழங்கி, அவர்கள் விரும்பும் அரசு நலத்திட்ட உதவிகளில் முன்னுரிமை அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சைக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், ‘தங்கத்தந்தை’ திட்டத்தின்படி கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கரூம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலமாக வருகின்ற 28.03.2022 முதல் 31.03.2022 வரை ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இன்று (28.03.2022) மற்றும் 30.03.2022 ஆகிய நாட்களில் குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையிலும், 29.03.2022 மற்றும் 31.03.2022 ஆகிய நாட்களில் அன்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இம்முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

தமிழகத்தின் முன் மாதிரி திட்டமாக ‘ தங்கத் தந்தை திட்டம் ‘ கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் க கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள முன்வரும் ஆண்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5,000/- அல்லது இலவச வீட்டுமனை பட்டா, வீட்டில் முதியவர் ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை, விலையில்லா கறவை மாடு அல்லது வெள்ளாடு, இலவச கால்நடை கொட்டகை மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க ரூ .10 லட்சம் வரை குறைந்த வட்டியில் பிணையதாரர் இல்லாமல் வங்கிகடன், வேளாண்மை துறையின் மூலமாக சிறு குறு விவசாயிகளுக்கு 100 % மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து தரப்படும் .

தோட்டக்கலைத் துறையின் மூலமாக தென்னை, பல அடுக்கு பயிர் திட்டம் வழங்கப்படும் ( ஒரு ஹெக்டேருக்கு ரூ.40,000 / – ), விவசாயிகளுக்கு சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ .446 / – வீதம் 50 % மானியத்துடன் அதிகபட்சமாக 4,000 ச.மீட்டர் வரை நிழல் வலை கூடாரம் அமைக்க நிதி உதவி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை. கால் உபகரணங்கள் இலவசமாக வழங்குதல் ( மதிப்பு சுமார் : ரூ .25,000 முதல் ரூ .35,000 வரை ) உள்ளிட்ட அரசு திட்டங்களில் பயனாளியின் விருப்பத்திற்கேற்ப ஏதேனும் ஒரு அரசு திட்டத்தில் முன்னுரிமை அளித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

தங்களது நலன் கருதியும் பொது நலன் கருதியும் கருத்தடை செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் . இந்த திட்டம் தொடர்பாக மேலும் விபரங்களுக்கு 9443942304, 9443904031 மற்றும் 9944523334 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top