மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் உறுதி! திட்ட மதிப்பீடு தயார்-அமைச்சர் வேலு;

முத்தமிழறிஞர், கலைஞர் என்று தமிழக மக்களால் அழைக்கப் பட்டவர் மு கருணாநிதி. இவர் தமிழகத்தில் முதல்வராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஆட்சியில் தமிழகத்தில் பல மானிய பொருட்கள், நிவாரண பொருட்கள் மற்றும் இலவச பொருட்கள் வழங்கப்பட்டன.  வேலு

இந்நிலையில் இவருக்கு நினைவிடம் குறித்து திட்ட மதிப்பீடு தயாராக உள்ளதாக அமைச்சர் வேலு கூறியுள்ளார். அதன்படி சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கான திட்ட மதிப்பீடு தயார் என்று அமைச்சர் வேலு கூறியுள்ளார்.

இவை 2.21 ஏக்கரில் ரூபாய் 39 கோடியில் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

பொதுப்பணித்துறையின் அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்குமுறை, பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்துள்ளது. திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாட்களில் அரசாணை வெளியிடப்பட உள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக அரசாணை வெளியிட்ட பின் கருணாநிதி நினைவிட பணிகள் குறித்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment