திருமணத்தை நிறுத்திய மெஹ்ரீன்: முன்னாள் முதல்வர் குடும்பம் அப்செட்!

11f53a4bfc0d2881126ebe13dad3c2fe-1

முன்னாள் முதலமைச்சரின் பேரனை திருமணம் செய்ய இருந்த நடிகை மெஹ்ரீன் பிர்சாதா திடீரென தனது திருமணத்தை நிறுத்தி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அரியானா மாநில முன்னாள் முதல்வரின் பேரன் பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் நடிகை மெஹ்ரீன் பிர்சாதாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் பவ்யா பிஷ்னோய் குடும்பத்தினர் சிலருக்கு திடீரென கொரோனா  பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது 

இந்த நிலையில் திடீரென தனது திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் இனிமேல் பவ்யா பிஷ்னோய் உடன் திருமணம் நடக்காது என்றும் மெஹ்ரீன் பிர்சாதா தெரிவித்துள்ளார்.  மேலும் இது முழுக்க முழுக்க தன்னுடைய தனிப்பட்ட விஷயம் என்பதால் இதற்கு மேல் தான் கூற விரும்பவில்லை என்றும் இனி திரைப்படங்களில் நடிப்பதில் முழு கவனத்தை செலுத்த போவதாகவும் அறிவித்துள்ளார். திடீரென மெஹ்ரீன் பிர்சாதா திருமணத்தை நிறுத்தியது ஏன் என்ற காரணம் தெரியாமல்பவ்யா பிஷ்னோய் குடுபத்தினர் அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.