மேகதாது அணை பற்றி விவாதிக்கக் கூடாது! தமிழ்நாட்டுக்கு உரிய நீரை வழங்க வேண்டும்;

என்னதான் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒற்றுமையாக காணப்பட்டாலும் மாநிலத்திற்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகிறது. அவற்றுள் ஒன்றுதான் நதிநீர் பிரச்சனை. அதன்படி நம் தமிழகத்திற்கு பல வருடங்களாக நதிநீர் பிரச்சனையாக காணப்படுகிறது காவிரி நீர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மலையில் இருந்து காவிரி நீர் தோன்றுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இன்றளவும் உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்ட அளவு தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் குடிநீர் பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.

இதே நேரத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதாக கூறி இருந்தது. இதற்கு தமிழகத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து இன்று விவாதிக்கப்பட்டது. அதன்படி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் மேகதாது அணை பற்றி பேசக்கூடாது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது அடுத்து மேகதாது பற்றிய விவாதம் கைவிடப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment