மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மேகதாது அணையின் திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தாக்கல் செய்தது. குறிப்பாக மேகதாது அணையின் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து விடும் என்ற விஷயத்தை குறிப்பிட்டு தாக்கல் செய்தது.

அதோடு மேகதாது அணையின் திட்ட அறிக்கையை விவாதிப்பதற்கு காவேரி மேலாண்மைக்கு அதிகாரம் இல்லையென்றும் நாளை மறுதினம் நடைபெறும் காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக அரசு சார்பில் மேகதாது அணையின் திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மேகதாது அணை கட்டியப்போதும் தமிழகத்திற்கு வழங்கக்கூடிய நீரின் அளவானது குறையாது என தெரிவிக்கப்பட்டது.

இந்த விசாரணையில் மேகதாது அணையின் திட்ட அறிக்கையை விவாதிக்கலாம் என்றும் ஆனால் எவ்வித முடிவும் எடுக்க கூட்டாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

அதே போல் அதோடு தமிழக அரசின் மனு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment