Connect with us

மேகதாது அணை விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

megatha

செய்திகள்

மேகதாது அணை விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கடந்த சில ஆண்டுகளாகவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த வகையில் காவிரி ஆணையம் கூட்டத்தில்  மேகதாதுவில் அணை குறித்து விவாதிக்க கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம், கர்நாடகா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மேகதாது அணை குறித்து விவாதிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்ற நீதிபதி மேகதாது அணை வழக்கை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதேபோல் காவிரி மேலாண்மை கூட்டம் நடத்தலாம் என்று கூறியுள்ளது.

ஆனால் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் காவிரி மேலாண்மை கூட்டம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதி வரையில் நடைபெறாது என்பது உறுதியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top