கடந்த சில நாட்களாகவே சினிமா பிரபலங்கள், டிக்டாக் பிரபலங்கள் மரணம் அடையும் நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கனடா டிக்டாக் புகழ் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மேகா தாக்கூர் ( வயது 21) என்ற பிரபலம் தன்னுடைய சில வயது முதலில் இருந்தே சமூகவலைதளங்களில் வீடியோக்கள் போடுவதை வழக்கமாக கொண்டவர்.
இவருடை கலக்கல் வீடியோவை பார்ப்பதர்காகவே இன்ஸ்டாவில் மட்டும் சுமார் 930 கே -க்கும் அதிகமான ஃபாலோவர்கள் உள்ளனர். அழகிய உடலமைப்பு அசத்தலான நடிப்பு போன்ற பல்வேறு திறமைகள் இவரிடம் கொட்டிக்கிடக்கிறது என்றே சொல்லலாம்.
இந்த சூழலில் கடந்த நவம்பர் 24-ம் தேதி அவர் மரணம் அடைந்துள்ளதாக அவருடைய பெற்றோர் தெரிவித்து உள்ளனர். அதோடு நவ.29-ம் தேதி அவரது இறுதி சடங்கு நடைப்பெற்றதாக கூறியுள்ளனர்.
இத்தகைய தகவல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.