Connect with us

மேகதாது அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு; கர்நாடக அரசின் அறிவிப்பால் தமிழ்நாடு விவசாயிகள் அதிர்ச்சி!

megatha

செய்திகள்

மேகதாது அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு; கர்நாடக அரசின் அறிவிப்பால் தமிழ்நாடு விவசாயிகள் அதிர்ச்சி!

மேகதாது அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு; கர்நாடக அரசின் அறிவிப்பால் தமிழ்நாடு விவசாயிகள் அதிர்ச்சி!

கர்நாடக அரசு பட்ஜெட்டில் காவேரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு தெரிவித்திருப்பது தமிழ்நாடு விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காவேரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகம் சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் இன்று மாநில அரசின் நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது.

இதில் மேகதாது அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் தேவையான அனைத்து அனுமதியும் பெற்று மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மேகதாது அணை திட்ட சாத்திய கூறு அறிக்கையை கர்நாடகா ஒன்றிய நீர்வள ஆணையத்தின் கடந்த ஆண்டு தாக்கல் செய்தபோது தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.

இந்நிலையில் மேகதாது அணை கட்ட பாஜக அரசு கர்நாடகாவில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்நாடு விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாது அணை கட்டப்பட உள்ளதாக கர்நாடகா பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top