
Tamil Nadu
மேகதாது அணை விவகாரம்: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே மேகதாது அணை விவகாரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் நடப்பாண்டில் மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதோடு வரும் 17-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கக்கூடாது என்றும் மேகதாது அணைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆணையத்தின் முடிவுகள் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.
