Connect with us

மேகதாது அணை: தமிழகத்தின் தீர்மானத்திற்கு எதிர் தீர்மானம்? இன்று நிறைவேற்றம்!

megatha

News

மேகதாது அணை: தமிழகத்தின் தீர்மானத்திற்கு எதிர் தீர்மானம்? இன்று நிறைவேற்றம்!

மேகதாது அணை: தமிழகத்தின் தீர்மானத்திற்கு எதிர் தீர்மானம்? இன்று நிறைவேற்றம்!

தற்போது தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் பெரும் பிரச்சினையாக காணப்படுவது மேகதாதுவில் அணை கட்டுவது தான். ஏனென்றால் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட உள்ளதாக முடிவெடுத்துள்ளது

ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் நீர் வளத்துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சியின் எம்எல்ஏக்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதன்பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் காவேரி மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் கர்நாடக அரசு தமிழகத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக அறிவித்திருந்தது.

அதன்படி தீர்மானம் இன்று நிறைவேற்றுகிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கர்நாடக அரசு இன்று தீர்மானம் நிறைவேற்றுகிறது. கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவையில் இன்று தமிழகத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவை கண்டித்து தமிழக அரசு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top