மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் நடத்தும் போராட்டத்தை திமுக தான் கேட்க வேண்டும்

கர்நாடகாவில் சில ஆண்டுகளாக மேகதாதுவில் அணை கட்டுவோம் என  கூறி வருகின்றனர் .இந்த அணை கட்டுவதால் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து கிடைக்க கூடிய தண்ணீர் சரிவர கிடைக்காது என்பதால் பலரும் இதை தமிழ்நாட்டில் எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் திமுகவோடு கூட்டணி வைத்துள்ளது, கர்நாடக காங்கிரஸ் இன்று மேகதாதுவில் அணைகட்ட பாதயாத்திரை நடத்த உள்ளது.

இப்படி இரட்டை வேடம் ஏன் போடுகின்றனர் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக காங்கிரஸில் கூட்டணியாக உள்ள திமுகவினர் தமிழர்களுக்கு எதிரான மேகதாது அணை கட்டும் பாதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment