தமிழகத்தில் மீண்டும் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்!! அமைச்சர் அறிவிப்பு…

தமிழகத்தில்  மே 8- ஆம் தேதி முதல் மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டெல்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் சென்னை ஐஐடியில் 30 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மீண்டும் பயன்பெரும் வகையில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே தமிழகத்தில் 92.41% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 77.61% பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சுமார் 2 கோடி நபர்கள் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் இருப்பதால் வரக்கூடிய கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment