Connect with us

ஆளுநருடன் திடீர் சந்திப்பு..!! சூப்பர் ஸ்டார் பரபரப்பு பேட்டி?

rajini4560681 1579433576

பொழுதுபோக்கு

ஆளுநருடன் திடீர் சந்திப்பு..!! சூப்பர் ஸ்டார் பரபரப்பு பேட்டி?

இன்றைய தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆளுநருடன் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு எண்ட்ரி கொடுக்கிறாரா? என்ற கேள்வி சினிமா வட்டாரங்களில் எழுந்தது.

இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தமிழக ஆளுநரிடம் 20 முதல் 30 நிமிடம் பேசியதாகவும், அதோடு காஷ்மீரில் பிறந்த அவர் தமிழகத்திற்கு வந்த பிறகு தமிழகத்தை மிகவும் நேசித்தாக கூறினார்.

குறிப்பாக தமிழக மக்களின் நேர்மை, கடின உழைப்பு போன்றவைகள் அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறினார். அதே போல் ஆன்மீக உணர்வு மிகவும் ஈர்த்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்திற்கு நல்லது செய்வதற்கு தயாராக இருப்பதாக, ஆளுநர் தெரிவித்ததாக சூப்பர் ஸ்டார் கூறினார். இதனைத் தொடர்ந்து அரசியல் பற்றி விவாதித்தோம் என்றும் விரைவில் இது குறித்து பேசுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அவர் நடிக்க இருக்கும் டிரைலர் படத்தின் ஷூட்டிங் 15 அல்லது 20-ம் தேதி தொடங்கும் என கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top