நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு: தளபதியின் அடுத்த பிளான் இதுவா?

சென்னையை அடுத்த பனையூரில் நடிகர் விஜய் 3 மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா திரையுலகில் நடிகரும், விஜய் மக்கள் இயக்கம் தலைவருமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், தற்போது 3 மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தெரிகிறது.

இதனிடையே 12 மணி அளவில் பனையூரில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்துத்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் செங்கல் பட்டு, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் 5 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுப்பட்டார். அப்போது ரசிகர்களும் புகைப்படமும் எடுத்திருந்தார்.  அதொடு விஜய் மக்கள் இயக்கம் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் தற்போது 3 மாவட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு 11 மணி அளவில் பனையூரில் இருக்ககூடிய அலுவலகத்தில் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்காக நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மற்றும் வாரிசு படம் வெளியிடுதல் குறித்து ஆலோசிக்கலாம் என தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.