ஷீ அவார்ட்ஸின் விருதைப் பெற்றார் மீதா ரகுநாத்… எதற்காக தெரியுமா…?

ஊட்டியை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகை மீதா ரகுநாத். 2022 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான ‘முதலும் நீ முடிவும் நீ’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். கிஷன் தாஸ் இப்படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். பள்ளி மாணவி மற்றும் திருமணத்திற்கு தயாராகும் இளம்பெண் என இரு வேடங்களில் நடித்திருந்தார்.

தனது இயல்பான நடிப்பால் இளைஞர்களைக் கவர்ந்தவர் மீதா ரகுநாத். இந்த திரைப்படத்திற்காக நடந்த ஆடிஷனுக்கு 3000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். முதல் படமே அவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது.

இரண்டாவதாக கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘குட் நைட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் கதாநாயகன் ஜெயபீம் திரைப்பட புகழ் மணிகண்டன் ஆவார். மீதா ரகுநாத் மற்றும் மணிகண்டனின் யதார்த்தமான நடிப்பு இப்படத்திற்கு மாபெரும் வெற்றியைப் பெற்று தந்தது. இத்திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இவரின் நடிப்பிற்கு பாராட்டும் கிடைத்தது.

தற்போது ஷீ அவார்ட்ஸ் இந்த ஆண்டிகிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. ஷீ அவார்ட்ஸ் வருடம்தோரும் பெண்களுக்கான திறமையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையில், சினிமா, தொழில் போன்ற பல பீல்ட்களில் இருக்கும் பெண்களை விருது அளித்து கௌரவிக்கிறது.

அந்த நிலையில் நடிகை மீதா ரகுநாத்திற்கு ‘ஸ்கிரீன் ஸ்டீலர் ஆப் தி இயர்’ அவார்டை வழங்கி கௌரவித்துள்ளது. இதை ஷீ அவார்ட்ஸும் மீதா ரகுநாத்தும் இணைத்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தனர். அதில் ஷீ அவார்ட்ஸ், பெண்களின் திறமையை அங்கீகரிப்பது மற்றும் பெண்மையை பாராட்டும் இரவில் மீதா ரகுநாத்திற்கு இந்த விருது வழங்கியதில் மகிழ்ச்சி என்று கேப்ஷன் போட்டிருந்தனர். மீதா ரகுநாத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...