நடிகை அசின் கணவரின் சொத்துமதிப்பு ரூ.8000 கோடிக்கும் அதிகமா? ஆச்சரிய தகவல்..!

அஜித், விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை அசினின் கணவருக்கு ரூ.8000 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் துறைகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் அசின். இவர் தொழில் அதிபராக ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 47 வயதான ராகுல் சர்மா டெல்லியில் பிறந்து ராஷ்டிரசந்த் துகாடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் கனடாவின் சஸ்காட்சுவான் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலை ஆகிய இரண்டு இளங்கலைப் பட்டப்படிப்புகளைப் படித்தார்.

ராகுல் ஷர்மா 15 வயதில் இருந்தே தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். அந்த ஆர்வம் தான் அவரை மைக்ரோமேக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்க காரணமாக இருந்தது.

ராகுல் ஷர்மா தனது நண்பர்களான ராஜேஷ் அகர்வால், விகாஸ் ஜெயின் மற்றும் சுமீத் அரோரா ஆகியோருடன் இணைந்து 2000 ஆம் ஆண்டில் மைக்ரோமேக்ஸ் இன்ஃபர்மேட்டிக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். ஆரம்ப காலத்தில், இந்நிறுவனம் குறைந்த அளவிலான தொழில்நுட்ப தயாரிப்புகளில் ஈடுபட்டது என்பதும் அதன்பின்னர் இரட்டை சிம் போன்களை தயாரித்து பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவில் முதல்முறையாக இரட்டை சிம் போன்களை அறிமுகப்படுத்தியது மைக்ரோமேக்ஸ் தான்.

இது மட்டுமின்றி, ராகுல் ஷர்மாவின் புதிய நிறுவனமான, Revolt Intellicorp, 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மின்சார பைக், RV 400 ஐ அறிமுகப்படுத்தியது. 2022ஆம் ஆண்டில் முடிவடைந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.500 கோடி வருவாயைப் பெற்றதாக கூறப்படுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு ராகுல் ஷர்மாவின் நெருங்கிய நண்பர் அக்சய் குமார் தான் நடிகை அசினை அறிமுகப்படுத்தினார். தான் சந்தித்த நபர் மைக்ரோமேக்ஸின் நிறுவனர் என்பதை அசின் அறிந்திருக்கவில்லை. அதை அவர் தெரிந்து கொண்டபோது கோடீஸ்வரராக இருந்தாலும் அவரது பணிவு, எளிமை அவரை கவர்ந்தது. பின்னர் இருவரும் கருத்துக்களை பறிமாறி காதலித்து பின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அசினுக்கு வழங்கிய நிச்சயதார்த்த மோதிரத்தின் மதிப்பு மட்டும் ரூ.6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவின் நிகர மதிப்பு ரூ. 8273 கோடி என்றும் கூறப்படுகிறது. ராகுல் சர்மா பென்ட்லி சூப்பர்ஸ்போர்ட் லிமிடெட் எடிஷன், BMW X6 மற்றும் மெர்சிடிஸ் GL450 ஆகிய கார்களை வைத்திருக்கிறார். அவரது விருப்பமான கார், அவர் சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...