Entertainment
கிளம்பும்போதும் சேரனிடம் பிரச்சினை செய்த மீரா மிதூன் ..!
கமல்ஹாசன் தொகுத்தி வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது வாரங்களை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரயிறுதி நாட்களில் நடைபெறும் எலிமினேஷனுக்கான சுற்றில் இந்த வாரம் மீரா மிதூன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வருவதற்கு முன்னதாக, வீட்டுக்குள் இருந்த மீரா மிதூன் மிகவும் பதட்டமாக இருந்தார். முந்தைய நாள் நிகழ்ச்சியில் சேரன் மீது அவர் வைத்த குற்றச்சாட்டை நேற்று முன் தினம் கமல்ஹாசனும் இந்த விவகாரம் குறித்து மீராவிடம் விளக்கமாக பேசினார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் மற்றும் போட்டியாளர்களுக்கு நடந்த உரையாடலில் சேரனுக்கு ஆதரவான கருத்துக்கள் எழுந்த போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த ஆரவாரம் எழுந்தது. அப்போதே மீராவுக்கு இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என சந்தேகம் எழுந்தது.
அதை தொடர்ந்து கமல்ஹாசன் நிகழ்ச்சியில் தோன்றினார். வழக்கம் போல எலிமிமேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களிடம் கொஞ்சம் டென்ஷனை அதிகப்படுத்தினார். சரவணன், அபிராமி, கவின் என ஒவ்வொருவராக எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.
முடிவாக சாக்ஷி மற்றும் மீரா மிதூன் இருவரும் இருந்த போது எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல், மீராவின் பெயரை அறிவித்தார் கமல். பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து மீரா வெளியேறிய போது சேரனை பார்த்து “நீங்கள் விடுத்த சவாலில் ஜெயித்து விட்டீர்கள். நீங்கள் போட்டியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக என்னை வெளியேறிவிட்டீர்கள்” என்றார் மீரா. இதனை சற்றும் எதிர்பாராத சேரன், அதிர்ந்து நின்றார்.
