தலைமறைவான மீரா மிதுன்.. நீதிமன்றத்தில் காவல் துறை பரபரப்பு தகவல்!!

நடிகை மீரா மிதுன் தொடர்ந்து மாயமாகி இருப்பதாக சென்னை முதன்மை நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பிரபல நடிகையும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளராகி மிகவும் பிரபலமானவர் மீராமிதுன். இவர் கடந்த ஆண்டு னிமாத்துறையில் உள்ளவர்கள் உட்பட பலரை அவதூராகப் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

அந்த வகையில் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக மிதுன் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதனால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், நீதிமன்ற உத்தரவின்படி மீராமிதுனை தேடிய போது கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

இந்த வழக்கு மீண்டும் இன்றைய தினத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை மீரா மிதுன் தொடர்ந்து மாயமாகி இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்.
இதனால் அவரது உறவினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார். மேலும், இதனை ஏற்றுக்கொண்ட வழக்கு விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.