நடிகை மீரா மிதுன் தலைமறைவு: லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு!

தமிழ்சினிமாவில் நடிகையாகவும், மாடலிங் துறையில் அழகியாக இருந்தவர் நடிகை மீரா மிதுன். இவர் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இத்தகைய பதிவானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் கேரளாவில் கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

அடடே! நடிகர் கார்த்தியின் பேஸ்ஃபுக் ஹேக்.. ஷாக்கான ரசிகர்கள்!!

பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த மீரா மிதுன் கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீரா மீதுன் ஆஜராகவில்லை.

இதனால் அவருக்கு திராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அடி தூள்!! 52 வயதில் இவ்ளோ அழகா! வைரலாகும் லேட்டஸ் கிளிக்!

இந்த சூழலில் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக உள்ள மீரா மிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.