40 வயதிலும் டாப் ஹீரோயினுடன் போட்டி போடும் மீரா ஜாஸ்மின்..! லேட்டஸ்ட் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வெளியான ரன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின்.தமிழ்,மலையாள சினிமாவில் நடித்து பிரபலமான அழகான நடிகைகளில் ஒருவர்.தமிழில் தளபதி விஜய்யுடன் புதிய கீதை, அஜீத்துடன் ஆஞ்சநேயா போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

artist 822 meera jasmine photos images 11501

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து, விஷாலின் சண்டக்கோழி ,புதியகீதை மெர்குரிபூக்கள் உட்பட பல திரைப்படங்களில் க்யூட்டான நடிப்பை நடித்தவர் மீரா,இவர் மலையாளத்தில் நடித்த “பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்’ என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

meera

நடிகை மீரா அவர்கள் 2014 ஆம் ஆண்டு வெளியான படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை.மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது.திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

2e689db53e5d139bc1a28c0c075191f01661254107604224 0

காதலியாக இல்லாமல் மனைவியாக களமிறங்கும் திரிஷா ! லோகேஷ் படத்தின் மாஸ் அப்டேட் !

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி சில காலம் திரையுலகிற்கு விடுமுறை விட்டிருந்தார் . இதையடுத்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் என மீரா உடல் எடையை குறைத்து சிக்கென பழைய தோற்றத்துடனும் கவர்சியுடனும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார்

மீரா ஜாஸ்மின் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இளைஞர்களை தன பக்கம் திருப்ப வைத்துள்ளார்.அந்த வகையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment