மீனம் வைகாசி மாத ராசி பலன் 2023!

மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டம்தான் வைகாசி மாதமாகும்.

மீன ராசியினைப் பொறுத்தவரை சூர்ய பகவான்3 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை தேவை. காதல் கைகூடும் வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்கள் கைகூடும்.  கோபம், ஆக்ரோஷத்தால் நிறைய உறவுகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். தாயுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டு இருந்த வெளியூர்ப் பயணங்கள் தடைபடும்.

எந்தவொரு விஷயத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள்; ஆராய்ந்து நிதானமாக முடிவுகளை எடுப்பீர்கள். தொட்டது துலங்கும் மாதமாக வைகாசி மாதம் உங்களுக்கு இருக்கும். சகோதரர்களால் ஆதாயப் பலன்கள் ஏற்படும்.

தொழில்துறையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பெரிய அளவில் நஷ்டங்கள் எதுவும் இருக்காது. புதிய முதலீடுகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை தங்க நகைகளை வாங்கி மகிழ்வீர்கள்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பழைய கடன்களை அடைப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களில் வெற்றிகள் கிடைக்கும். பேசும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துப் பேசுதல் வேண்டும். உடல் நலன் சார்ந்து விரயச் செலவுகள் ஏற்படும்.

மேலும் கடன் கொடுக்கல் வாங்கல் ரீதியாக நஷ்டத்தினை சந்திப்பீர்கள்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

துர்கை அம்மனை வழிபட்டு வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews