மீனம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

மீன ராசியினைப் பொறுத்தவரை ஆகச் சிறந்த மேன்மைகள் நிறைந்த காலட்டமாக இருக்கும். ஏழரைச் சனியின் முதல் ஆண்டுகாலத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது; நன்மையினையே கொடுக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை திருமண அமைப்புகள் அமையப் பெறும். வேலைவாய்ப்புரீதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வு, புது வேலை கிடைக்கும், உத்தியோகரீதியாக அங்கீகாரம் கிடைக்கும்.

தொழில்ரீதியாக லாபம் இருக்கும், வெளியூர்ப் பயணங்களால் ஆதாயப் பலன்கள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதால் செலவுகள் ஏற்படும். நீண்டகால முதலீடுகளில் சேமிக்காமல் குறுகிய கால முதலீடுகளில் சேமிக்கத் துவங்குங்கள்.

குருவின் நகர்வு, சனி பகவானின் நகர்வு வரவுள்ள 5 ஆண்டுகளுக்கு மிகவும் மோசமாக உள்ளது; அதனைச் சமாளிக்க தற்போதே திட்டமிடுதல் அவசியம். பணவரவு கையில் இருக்கையில் விரயச் செலவு செய்யாமல் எதிர்காலத் தேவைக்காகச் சேமியுங்கள். செலவுகளைக் குறைத்து சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

வாக்கினைக் கொடுக்கும்போது கவனமாக இருத்தல் வேண்டும். தன்னம்பிக்கையுடனும், துணிவுடனும் செயல்பட்டால் மட்டுமே எந்தவொரு பிரச்சினையும் எதிர்கொள்ள முடியும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews