மீனம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

மீனம் சுபகிருது வருட பலன்கள்

நீதி, நேர்மை குணம் கொண்ட மீனம் ராசி அன்பர்களுக்கு மோசமான காலக்கட்டமாக இருக்கும். நீங்கள் செய்ய நினைக்கும் பெரிய காரியங்கள் தடைபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பொருளாதார ரீதியான பல பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

மாமனார் வீட்டாருடன் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வாக்குறுதி கொடுத்துவிட்டு காப்பாற்ற முடியாமல் அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.

மன ரீதியான பிரச்சினைகள் அதிகம் இருந்தாலும் உடல்ரீதியான பிரச்சினைகள் எதுவும் இராது. சகோதர- சகோதரிகளில் ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாகப் பேசினால் பிரச்சினைக்கு வழிகோலும், நாட்கள் தள்ளிப் போட்டால் பிரச்சினையின் வீரியம் குறையும்.

பெற்றோரின் உடல் நலனில் அக்கறை தேவை. வீடு, மனை வாங்கும் விற்கும் யோகம் உண்டு. நீண்டகாலமாக வாங்க நினைத்திருந்த புதிதாக வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

புத்திர பாக்கியத்திற்குக் காத்திருப்போருக்கு நிச்சயம் கிடைக்கும். குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை தேவை. தொழிலை அபிவிருத்தி செய்ய கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

திருமண காரியங்கள் நிச்சயம் கைகூடும். திருமண தோஷம் உள்ளவர்களுக்கும் திருமணம் கைகூடும் காலமாக இருக்கும். வாக்குவாதத்தால் கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் பிரிவினையை ஏற்படுத்தும். பேச்சில் கவனம் தேவை.

தடைபட்ட கல்வியினை மீண்டும் தொடர்வீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews