மீனம் செப்டம்பர் மாத ராசி பலன் 2018!

அன்புள்ள மீனம் ராசியினர்களே, இந்த செப்டம்பர் மாதம் பழைய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு காணும் மாதமாக இருக்கும். தனவரவு பெருகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொலைதூரத்தில் இருந்து இனிய செய்தி வரக்கூடும்.

புதன் சூரியனோடு இணைந்து புத-ஆதித்ய யோகம் உருவாகுவதால் புதிய சிந்தனைகள் பிறக்கும். பக்குவமாக பேசி காரியத்தை சாதித்து காட்டுவீர்கள். செப்டம்பர் 15-ம் தேதி புதன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் பொழுது  குடும்பத்தில் முன்னேற்றம் கூடுதலாக இருக்கக்கூடும்.

செப்டம்பர் 6-ம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் தடையின்றி நடைபெறக்கூடும். குரு பகவான் உங்கள் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பாதல் உங்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை அகற்றுவார். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் சற்று விலகி இருப்பது நன்மை தரும். சொத்துகள் சம்மந்தமான பாக பிரிவினை பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். அடகு வைத்த  நகைகளை மீட்பீர்கள்.

சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது ஆடை, அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். சுக்கிரன் குருவுடன் இணைந்து எட்டாம் இடத்தில் இருப்பதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். இடமாற்றம், ஊர்மாற்றம், வீடு மாற்றங்கள் நடைபெறக்கூடும்.

சனி வக்ர நிவர்த்தியாகி இருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உங்கள் ராசிக்கு 12,11-ம் இடங்களின் அதிபதியான சனி பகவான் பத்தாம் வீட்டில் வலு பெரும் பொழுது தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி மேலோங்கும். அலுவலகத்தில் உங்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் கொடுக்க படும். சற்று போராடி முடிக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment