மீனம் ராசியினருக்கு இந்த பங்குனி மாதம் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய மாதமாக இருக்கிறது. மீனம் ராசிக்கு கேது பகவானால் நன்மை உண்டாகும். பதினோராம் இடத்தில் இருக்கும் கேதுவால் எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றி கிட்டும். பொருளாதாரம் மேம்படும். பணவரவு சீராக இருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதால் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
மார்ச் 27-ம் தேதிக்குப் பிறகு சுக்ரன் மேஷம் ராசியில் வருவது சாதகமான பலன்களைக் கொடுக்கும். ஆடம்பர வசதிகள் பெருகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும்.
சூரியன் உங்கள் ராசியில் வருவதால் அலைச்சலும், சோர்வும் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் பகையை சம்பாதிக்க நேரிடலாம். பயணங்களில் கவனம் தேவை. உஷ்ணத்தால் கட்டி, தோல் சம்பந்த நோய்கள் வரக்கூடும். சூரியன் உங்கள் ராசியில் இருக்கும் பொழுது ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டும். மன இறுக்கம், முன்கோபத்தை தவிர்க்க பாருங்கள். அவ்வப்போது சுற்றலா சென்று வருவீர்கள்.
மீனம் ராசியினருக்கு ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து அதிசார வக்ர குருவால் எத்தனை பிரச்சனைகள், தடைகள் வந்தாலும் அதனை சமாளிக்கும் ஆற்றல் இருக்கும். பிதுர் வழி சொத்துகளில் இருந்த பிரச்சனைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.
குரு பகவானால் சுப நிகழ்ச்சிகள், மங்கள பேச்சுவார்த்தைகள் நிகழும். கல்யாண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். சுக்ரன் மார்ச் 27-ம் தேதிக்கு பிறகு சாதகமாக அமர்வதால் வெளியூர் பயணங்கள் உண்டாகும். புதன் பகவான் சாதகமற்ற நிலையில் இருப்பதால் தடைகள், பிரச்சனைகள் தோன்றி மறையக்கூடும். சிலருக்கு பணம் விரயம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனக்கசப்பு வரக்கூடும்.
சகோதர வகையில் உதவி கிடைக்கும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் மாதமாக இருக்கும். விழாக்கள் மற்றும் விருந்துகள் போன்றவற்றில் கலந்து கொள்வீர்கள். மார்ச் 24-ம் தேதிக்குப் பிறகு உறவினர்களால் வீண் விரோதம் வரலாம்.
மீனம் ராசி பெண்கள் வேண்டியக் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்குப் பிறகு குரு பகவானால் நிலையற்ற தன்மை, மன வேதனை வரக்கூடும். செய்யும் தொழில், வியாபாரம் போன்றவற்றில் அலைச்சல் உண்டாகும்.
செவ்வாய் பகவானால் எதிரிகளின் தொல்லை தலை தூக்கும். பணி சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். மார்ச் 26-ம் தேதிக்குப் பிறகு மதிப்பு, மரியாதைக் கூடும். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தாலே போதும்.
மாணவ, மாணவிகள் படிப்பில் நாட்டம் இல்லாமல் கவனம் சிதறும் என்பதால் பெற்றோர் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடந்துக் கொண்டால் நன்மைகள் உண்டாகும்.
பரிகாரம்:
சனிக்கிழமையில் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
திங்கட்கிழமை சிவனுக்கும் அம்மனுக்கும் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் தடைகள் எல்லாம் விலகும்.