மீனம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

1 ஆம் இடத்தில் குரு, 3 ஆம் இடத்தில் செவ்வாய், 7 ஆம் இடத்தில் சூர்யன், சுக்கிரன், புதன், 11 ஆம் இடத்தில் சனி, 2 ஆம் இடத்தில் ராகு, 8 ஆம் இடத்தில் கேது என கோள்களின் இட அமைவு உள்ளது.

அக்டோபர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டம் உங்களுக்கான காலகட்டமாக இருக்கும். வேலைவாய்ப்புரீதியாக பதவி உயர்வு, பாராட்டுகள், சம்பள உயர்வு என நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் ஈடேறும்.

தொழில்ரீதியாக புதிய தொழில் துவங்குதல், அபிவிருத்தி என தொட்ட காரியங்கள் துலங்கும், கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். திருமண வரன் பார்ப்போருக்கு தங்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையிலான வரன் கிடைக்கப் பெறும்.

சிலருக்கு உடனடியாக நிச்சயதார்த்தம், திருமணம் என விறுவிறுவென ஏற்பாடுகள் நடக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை ராகுவின் பார்வையால் கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் உறவினர்களின் தலையீட்டால் பிரச்சினைகள் ஏற்படும்.

மாணவர்களைப் பொறுத்தவரை எதிர்மறையான பார்வை எதுவும் இல்லை, அதனால் திட்டமிட்டபடி படிக்கலாம்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை ராகு- கேதுவால் பாதிப்புகள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.