மீனம் மார்ச் மாத ராசி பலன் 2023!

மீன ராசியினைப் பொறுத்தவரை குரு- சுக்கிரன் இணைந்தும், சுக்கிரன் உச்சம் அடைந்தும் உள்ளது. வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இதுவரை வேலை எதுவும் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருந்தவர்களும் வேலை தேட முயற்சிப்பார்கள்.

ஆனால் இருக்கும் வேலையில் இருந்து புது வேலைக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது. வேலைப் பளு அதிகமாக இருக்கும்.

தொழில்ரீதியாக அலைச்சல், மன உளைச்சல் என நெருக்கடியான சூழ்நிலையாக இருக்கும். வாங்கிய கடனை கட்ட முடியாமல் மீண்டும் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

குடும்பத்தில் சண்டை- சச்சரவு அதிகரிக்கும், மூன்றாம் நபர்களின் தலையீடு மிகவும் அதிகமாக இருக்கும். திருமண காரியங்கள் குறித்த பேச்சுகள் எதையும் தற்போதைக்கு எடுக்காமல் இருத்தல் நல்லது.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாகக் கவனம் குறையும், புதனின் அமைவு கவனச் சிதறல், மந்தநிலை போன்றவற்றினை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம்ரீதியாக வீண் செலவுகள் ஏற்படும், தாயின் உடல் நலனில் அக்கறை தேவை.

பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகள் மன உளைச்சலைக் கொடுக்கும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews