மீனம் கார்த்திகை மாத ராசி பலன் 2022!

பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சூர்யன், சுக்கிரன், புதன் கோள்கள் பல நன்மைகளையும், சில சங்கடங்களையும் ஏற்படுத்தும். எந்தவொரு காரியத்துக்கும் முயற்சிக்கும்பட்சத்தில் அறிவுப்பூர்வமான வெற்றிகள் கிடைக்கும், ஆனால் அதிர்ஷ்டத்தால் வெற்றிகள் எதுவும் கிடைக்காது.

தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், மேலும் தந்தைக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். இதனால் விரயச் செலவுகள் ஏற்படும்.

தேவையான பண வரவுகள் செவ்வாய் பகவானின் பார்வையால் கிடைக்கப் பெறும். கடன் தொல்லை அதிகரிக்க வாய்ப்புண்டு; அதனால் வீண் கடன் வாங்காதீர்கள்.

விரய ஸ்தானத்துக்கு சனி இடப்பெயர்வு செய்ய உள்ளதால், தொழில் செய்வோருக்கு நஷ்டம் ஏற்படும் காலமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறைந்து காணப்படுவீர்கள்.

எதிரிகளின் பலம் அதிகரிக்கும்.  பதவி உயர்வு தள்ளிப் போகும், வேலை பார்க்கும் இடத்தில் மேல் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்க்கவும்.

குழந்தைகள் கல்வியில் மந்தமாகக் காணப்படுவார்கள், உடன் பிறப்புகளுடன் பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளர்களின் உறவில் விரிசல் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடங்கல்கள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.