மீனம் ஜூன் மாத ராசி பலன் 2023!

மீன ராசியினைப் பொறுத்தவரை 10 ஆம் இடத்திற்குரிய குரு பகவான் இரண்டாம் இடத்தில் அமர்கிறார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை ஜூன் முதல் வாரம் வரையிலான காலகட்டம் உங்களுக்கு அனுகூலமானதாகவே இருக்கும்.

புதிய மாற்றங்களைச் செய்ய நினைத்தாலோ, புது முயற்சிகளைச் செய்ய நினைத்தாலோ ஜூன் முதல் மற்றும் நான்காம் வாரத்தில் செய்யுங்கள். ஜூன் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரங்களில் மாற்றம் எதையும் செய்யாதீர்கள்.

தொழில்ரீதியாக பெரிய அளவில் பாதகமான சூழல் எதுவும் கிடையாது; ஆனால் ஆராயாமல் எடுக்கும் முடிவுகள் வீண் விரயச் செலவுகளை ஏற்படுத்தும்.

திட்டமிட்டு எந்தவொரு விஷயத்தையும் செய்யுங்கள், யோசிக்காமல் திடீரென எடுக்கும் முடிவுகள் பெரும் இழப்புகளுக்கு இட்டுச் செல்லும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன் எதிர்பார்த்ததுபோல் அமையும், ஆனால் திருமண தேதியை தற்போதைக்குக் குறிக்க வேண்டாம்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவில் மனக் கசப்புகள் ஏற்படும். சோதனை நிறைந்த காலகட்டமாக இருப்பதால் சகிப்புத் தன்மையுடன் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மாணவர்களைப் பொறுத்தவரை அலைச்சல்கள் நிறைந்த மாதமாக இருக்கும். எடுக்கும் முடிவுகளில் குழப்பங்கள் நிறைந்ததாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பத்தின் மீதான பொறுப்புகளும், பாரமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் சிறு சிறு உடல் தொந்தரவுகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews