மீனம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!

ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் மீன ராசிக்கு 2 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். மீன ராசியினைப் பொறுத்தவரை பழைய கடன்கள் வசூலாகும். மேலும் உங்களின் பணத் தட்டுப்பாடுகள் குறைந்து பணப் புழக்கம் அதிகரிக்கும்.

எதிரிகளுடனான பிரச்சினைகள் தீர்வதைக் கண்கூடாகப் பார்க்கலாம். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் மிகச் சிறந்த மாற்றங்கள் ஏற்படும்.

மாணவர்களைப் பொறுத்தவரை படிப்பில் இருந்த தடைகள் நீங்கும். தொழில்துறையில் வேலை பார்த்தவர்கள் அடிமைத் தனத்தில் இருந்து மீண்டு சொந்தமாகத் தொழில் துவங்குவீர்கள்.

வேலைவாய்ப்புரீதியாக பெரிய அளவிலான பதவிகளுக்குச் செல்வீர்கள். மிகப் பெரிய கௌரவங்கள் ஏற்படும்.  உடல் ஆரோக்கியம்ரீதியாக பிரச்சினைகள் ஏற்படும்; உடற் பயிற்சி செய்து வருதல் வேண்டும்.

கோர்ட் வழக்குகள் போன்ற விஷயங்களில் தீர்ப்புகள் சாதகமானதாக இருக்கும். உள்ளூர்ப் பயணங்கள், வெளியூர்ப் பயணங்களால் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய அளவிலான லாபம் கிடைக்கப் பெறும். ஆனால் பயணங்களால் உடல் அலைச்சல், சோர்வு போன்றவை ஏற்படும்.

வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். யாரிடத்திலும் கோபமாகப் பேசாமல் நிதானித்துப் பேசுதல் வேண்டும்.

வாஞ்சிநாதர் கோவிலுக்குச் சென்று பசு மாட்டு நெய்யால் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி பார்வையின் தாக்கம் குறைந்து வாழ்க்கையில் அனுகூலங்கள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews