மீனம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023!

10 ஆம் இடத்தில் இருக்கும் புதன் 11 ஆம் இடத்திற்கு 7 ஆம் தேதி இடம் பெயர்வதால் ஆதாயப் பலனைக் கொடுப்பார். சூர்யன் மகரத்தில் இருந்து கும்பத்திற்கு இடம் பெயர்கிறார்.

சனி பகவான் 12 ஆம் இடம், செவ்வாய் 3 ஆம் இடம், ராகு 2 ஆம் இடம் என கோள்களின் இட அமைவு உள்ளது. வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எந்தவொரு மாற்றத்தையும் செய்யாமல் இருத்தல் நல்லது,

தொழில்ரீதியாக நஷ்டம் ஏற்படாமல் இருக்க, புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருத்தல் வேண்டும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை தேவையற்ற பேச்சுகளால் பிரச்சினைகள் ஏற்படும், மூன்றாம் நபர்களால் கணவன்- மனைவி இடையே சண்டைகள் ஏற்படும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்கள் தட்டிப் போகும், காதலர்கள் வீட்டில் காதலைச் சொல்லும்போது எதிர்ப்பு கடுமையாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்ரீதியாக இருந்த பிரச்சினைகளில் இருந்து ஓரளவு மீள்வீர்கள். வீட்டின் அத்தியாவசியத் தேவைகளை கடன் வாங்கியாவது பூர்த்தி செய்வீர்கள்.

உங்களுக்குச் சூழல் சாதகமாக இல்லாவிட்டாலும் மிகவும் தன்னம்பிக்கையோடு எந்தவொரு செயலையும் செய்வீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews