மீனம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

அடுத்த ஆண்டு ஏழரைச் சனி துவங்கவுள்ளதால் விறுவிறுவென நல்ல காரியங்களை இந்த டிசம்பர் மாதத்திற்குள் செய்து முடிக்கும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்.

10 ஆம் இடத்தில் சுக்கிரன்-சூர்யன்-புதன் கோள்கள் இணைந்து காணப்படுகின்றது. 2 ஆம் இடத்தில் ராகு பகவான், 3 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் வக்ரநிலையில், 11 ஆம் இடத்தில் சனி பகவான், ஜென்மத்தில் குரு பகவான் என கோள்களின் இட அமைவு உள்ளது.

டிசம்பர் மாதம் மீன ராசிக்கு மிகவும் சாதகமான பலனைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். வேலைவாய்ப்புரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும் முக்கியமான மாற்றங்கள் செய்வதற்கும் ஏற்ற மாதமாக இருக்கும்.

குரு பகவான் திடகாத்திரமான மனதினைக் கொடுப்பார். அறிவுப்பூர்வமாகச் செயல்படும் விஷயங்களில் அதிர்ஷ்டமும் சேர்ந்து சிறப்பான முடிவைக் கொடுக்கும்.

தொழிலை அபிவிருத்தி செய்வோர் தாரளமாக டிசம்பர் மாதத்தில் செய்து முடியுங்கள். திருமண காரியங்களைப் பொறுத்தவரை தயங்காமல் செய்து முடிக்கலாம். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவில் பிரச்சினைகள் ஏற்படும்.

மூன்றாம் நபர்களின் தலையீடு குடும்ப உறவில் விரிசலை ஏற்படுத்தும். மாணவர்களைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம்ரீதியாக உணவு சார்ந்த உடல் கோளாறுகள் ஏற்படும், குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நற்செய்தி தேடி வரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.