மீனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023!

மீன ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாதத்தினைப் பொறுத்தவரை இருப்பதைக் கொண்டு வாழ வேண்டிய மாதமாக இருக்கும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புது வேலைக்கு முயற்சிப்போர் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்.

நினைத்த வேகத்தில், நினைத்த விஷயத்தில் பலன் இருக்காது. ஆனால் முயற்சியினைக் கைவிடாதீர்கள். தொழில்ரீதியாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்காது. தொழில் கூட்டாளர்களுடன் பிரச்சினைகள் ஏற்பட்டுத் தொழில் பிளவுறும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

திருமண காரியங்களைப் பொறுத்தவரை பல வகைகளிலும் உங்களை நீங்கள் சமாதானம் செய்து கொண்டு வரனுக்கு ஆமோதிப்பீர்கள். மாணவர்களைப் பொறுத்தவரை தேவையில்லாத மனச் சிந்தனைகளைத் தவிருங்கள். யார் சொன்னாலும் கேட்பதைத் தவிர்க்கவும்; பெற்றோர்களிடமும், முன் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசித்து பின்னர் முடிவு எடுங்கள்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை வாழ்க்கைத் துணையுடன் மனக் கசப்புகள் இருந்தாலும், அதனைச் சமாளித்துச் செல்வீர்கள். உடன் பிறப்புகள் சொத்து சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தி, நெருக்கடியினைக் கொடுப்பர்.

நண்பர்கள், உறவினர்கள் இக்கட்டான நேரங்களில் உதவி செய்யமுடியாமல் போவார்கள். பொருளாதாரரீதியாக பெரிய அளவில் நெருக்கடி இருக்கும்; கடன் தொல்லை மன உளைச்சலைக் கொடுக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

கவனக் குறைவாகவோ, அலட்சியமாகவோ இருந்தால் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews