மீனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

மீனம் இராசியினைப் பொறுத்தவரை குருவின் வக்கிரம் அடைந்தும், சனி பகவான் 11 ஆம் இடத்தில் இருப்பதால் பதற்றத்துடன் செயல்படுவீர்கள். தொழிலைப் பொறுத்தவரை புதிய முயற்சிகள் எதையும் எடுக்காமல் இருப்பதைக் கொண்டு காலம் கடத்துவது நல்லது.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரையில் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்வதே சிறந்தது. தொழில் அபிவிருத்தியோ அல்லது அதிக முதலீடுகளையோ செய்ய வேண்டாம். அது பெரும் ஆதாயத்துக்கு வழிவகுக்காது.

ராகு- செவ்வாய் இணைவு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். திருமண காரியங்களில் வரன் பார்ப்போருக்கு திருப்தி தரும் வகையிலான வரன் அமையாது.

சுக்கிரன் நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கு நகர்கிறார். குடும்ப வாழ்க்கையில் பூரண திருப்தியினை எதிர்பார்க்க முடியாது. வேலைபார்க்கும் இடங்களில் பொறுப்புகளை அதிகமாக உங்களுக்குக் கொடுத்தாலும் பாராட்டுகளும், அங்கீகாரமும் உங்களுக்கு சரிவர கிடைக்காது.

காதல் வாழ்க்கையில் இருப்போருக்கு மிகவும் தலைவலியான காலகட்டமாக இருக்கும். அடுத்து என்ன நடக்குமோ? இது திருமணத்தில் முடியுமா? என்ற பல குழப்பங்களுடன் இருப்பீர்கள்.

முடிவெடுக்க முடியாத தருணமாக இருப்பதால் 21 ஆம் தேதிக்கு மேல் முடிவுகளை எடுக்கவும்.

மாணவர்களைப் பொறுத்தவரையில் புதன் – குரு பார்வையால் 21 ஆம் வரை குழப்பங்கள், மன உளைச்சல்கள் மிகுந்து காணப்பட்டாலும் அதன்பின்னர் சிறந்த பலன்கள் கிடைக்கப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.